ABOUT US

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

"என்ற பொன்மொழி வெறும் வார்த்தை வசனர்த்திகவோ செய்யுள் அழகிற்காகவோ ஏழுதப்பட்டது அல்ல. அது வாழ்கைக்கானது, உலகிற்கானது என்ற உண்மையை இன்றளவும் உலகம் முழுதும் பரவியிருக்கக்கூடிய நம்ம தமிழ்ச் சொந்தங்கள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன".

"மூத்தகுடி நம் குடி" "முது மொழி நம்மொழி" "முத்தமிழ் நம் சுவாசம்" "இத்தனை பெருமைகளையும் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் நாம். தமிழர்களாகிய நாம் நமது தொன்மையையும் பெருமையையும் இன்று பலருக்கும் அடிமைகளாகவேநடத்துகிறார்கள்".

"வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்"

"என்றும் பெரும் பேருக்குரிய நாம் இன்று வாழிடம் தொலைத்து விட்டு அகதிகளாக அலையும் அவை நிலைகுத் தள்ளப்பட்டுள்ளோம். இத்தனைக்கும் காரணம் நம் அரசியல்"

.

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்"

என்ற உலக நியதியை மறந்த நம் தமிழர்கலில் சிலர் தங்களுடைய சுயலாபத்திற்காகவும் யாரோ ஒருவருக்காகவும் தவறான அரசியல் பிழைப்பு நடத்தி வருகிறார்கள் தவறானஅரசியல் அமைப்புகளாலும் தமிழ் இயக்கங்களினாலும் தொடர்ந்து தவறாக வழிநடத்தப்பட்ட தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டு வருகிறார்கள்.

"தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"

இந்தச் சூழலிலிருந்து தமிழர்களை மீட்டேடுப்பதற்காகவும் அவர்தம் உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவும் உண்மை அரசியலை உலகிற்கு கொண்டு வருவதற்காகவும் உங்களின் குரல் தமிழர் வானொலியில் உலகம் முழுவதும் ஒலிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

இந்த உயரிய நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டதுதான் நம் தமிழர் வானொலி உலகமெங்கும் ஒலிக்க இருக்கும் நம் சர்வதேச வானொலி தமிழர் குழுமத்தின் அங்கமாகும்.

இது தமிழர் வானொலி இது உலக தமிழர்களுக்கான சர்வதேச வானொலி.

முகவரி
Cavendish House,Unit 5,1st Floor Burnt Oak BroadwayEdgware,Middlesex HA85AW
London, UK
+44 (0) 207 101 4618
Copyright © 2020 Designed by: தமிழர் வானொலி